amilsolution_ad_alt amilsolution_ad_alt amilsolution_ad_alt
amilsolution_ad_alt amilsolution_ad_alt
amilsolution_ad_alt amilsolution_ad_alt amilsolution_ad_alt
பிரதான செய்திகள்

மரத்திற்கு சரிவு நல்லதல்ல.

மர்ஹூம் அஷ்ரஃப்  அவர்கள் மரச் சின்னத்தில் தோற்றுவித்த கட்சிதான் முஸ்லிம் காங்கிரஸ்.

1987 - 1988 காலப் பகுதியில் இலங்கை முஸ்லிம்களின் தேசிய கட்சியாகப் அது பரிணமித்தது.

குர்ஆனும் ஹதீஸூம் இதன் யாப்பு என சட்டத்தரணி அஷ்ரஃப் எழுதியது  அக்காலத்தில் ஒரு புதிய நகர்வுக்கான அரசியல் சிந்தனை என்பதை மறுக்க முடியாது.

அஷ்ரஃப் அந்த வழியில் நடந்தாரா? அவரது கட்சி நடக்கின்றதா? தற்போதய தலைவர் நடக்கின்றாரா? என்பது பலபக்க கேள்விகளாகும்

முஸ்லிம் காங்கிரஸ் என்பது தமிழரசுக் கட்சி போன்று ஒரு இனத்தின் சமயக் கோட்பாட்டாளர்களின் கட்சி என்று பார்ப்பதை விடுத்து அது ஒரு இனவாதக் கட்சி என்ற பிரச்சாரம் பேரினவாதிகளிடம் வலுக்கும் முன்னரே அஷ்ரஃப் தனது கட்சியை நுஆ என்ற கட்சியாக மாற்றி இலங்கையில் வாழும் பல்லின மக்களையும் பிரதிநித்துவப்படுத்தும் சூட்சுமத்தை அஷ்ரஃப் சாணக்கியமாக செய்தாலும் மறுமைப் பயணம் அவரை அவசரமாக அழைத்துக் கொண்டது . திட்டமிட்டபடி ஹெலி
அவரை அழைத்துச் சென்றாலும் அல்லாஹ் தனது எழுத்தை மாவனல்லை, திப்பிட்டி அரநாயக்க மலைமீது நடத்திக் காட்டினான்.

அன்றே அரசியல் அநாதை நிலைக்கு மாறி முஸ்லிம் சமூகம் இன்றும் அவர் போன்ற ஒரு வீரப்புருசனைக்காண ஏங்கித் தவிக்கின்றது என்பதுதான் கசப்பான உண்மை.

அஷ்ரஃப் அவர்களின் மரணத்தின் பின்னால் அவரது மனைவி
பேரியல் அஷ்ரஃப் அவர்கள் நுஆவில் கேட்டு அஷ்ரஃப் அவர்களின் மரண அனுதாபத்தால் வெற்றி பெற்றார்.

ஹகீம் தலைவராகின்றார்

ஹகீம் மர்ஹூம் அஷ்ரஃப் அவர்களின் அரசியல் நகர்வுகளையும் அனுபவங்களையும் நன்கு அறிந்தவராகவும் துடிதுடிப்பான ஒருவராகவும் மும்மொழிகளிலும் சிறந்த பேச்சாளர்களில் ஒருவராகவும் கட்சியின் முக்கிய பேச்சாளராகவும் விளங்கிய சட்டத்தரணி ஹகீம் (சேர்)அவர்கள் கட்சிக்கு புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டு சில ஆண்டுகள் மர்ஹூம் அஷ்ரஃப் தொடக்கிய பயணத்தில் கரிசனையாக செயல்பட்டு வந்ததை மறுக்க முடியாது.

அஷ்ரஃப் அவர்களின் மரணத்தின் பின்னால் முஸ்லிம் சமூகத்தில் பாரிய ஒரு இடை வெளி ஏற்பட்டது. சில பிரச்சினைகளை ஹகீம் சேரால் சமாளிக்க முடியாமல் போனது. சிலதில் அவரது பொடுபோக்குகளும் காரணே

நோய் ஆரம்பம்:
கட்சிக்சிக்குள் வைரஸ் பரவியது.

ஹாபிஸ் நஸீர் துஆக் கட்சி தொடங்கி தனிமையில் துஆவோடு திரிந்தார். அதாவுல்லாஹ், மற்றும் உதுமா லெப்பை போன்றோர் மகிந்த சால்வையில் தொங்கிக் கொண்டனர். மகிந்தயின் செல்லமகன் அதாவுல்லாஹ் மக்கள் காங்கிரஸ் என்ற கட்சியோடு குதிரைப் பயணத்தை அக்கரைப்பற்றில்
தொடங்கி அரசியல் வாப்பா மகிந்தவின்
பலத்தால் ரவ்டியாக உலாவந்தார்.

அக்கரைப்பற்றில் அதாவுல்லாவை மகிந்த மடயனாக்கி பிரித்தாளும் சூட்சுமத்தை செவ்வனே நிறைவேற்றினார். தவம் அதாவுல்லாவோடு தவண்டு துவண்டு கிடந்தார். பின்னர் மு.காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார். (பெரிய கதை

மட்டக்களப்பு மாவட்டத்தில் .
ஹிஸ்புல்லாஹ், அமீர் அலி போன்றோர் மட்டக்களளப்பிலும்
ரிஷாத் ஆகியோர் மற்றும் ஹுனைஸ் போன்றோர் மன்னாரிலும் சால்வைதாத்தாவின் குட்டிப் பிள்ளைகளாக வலம் வர தமக்கென
அ.இ.ம.க என்று கட்சியைத் தொடக்கிப் பயணிக்க மகிந்த உதவி செய்தார் . முஸ்லிம் காங்கிரஸை மகிந்த ஒருமிதிரி சரிக்கட்டினார்
கட்சிப் பெயர்கள்

காங்கிரஸ் + காங்கிரஸ் + காங்கிரஸ் = அஷ்ரஃப் என மொத்தம் 03 கட்சிகள் அஷ்ரஃபின் காங்கிரஸ் பெயரில் காணப்பட்டது.

மன்னாரில் ஹகீம் விட்ட தவறு
1990 ல் உடுத்திய உடையோடு வந்த மன்னார் மக்களின் புதிய திருமண செலவுக்காக அஷ்ரஃப் தலா 10.000. கொடுப்பது வழக்கம். அவரின் மரணத்தின் பின்னால் அது விடுபட்டுப் போனது
மன்னாரில் முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சியில் செல்வந்தர்
மர்ஹூம் மஷூர் அவர்களின் பங்களிப்பு மகத்தானது அவர் தனது நிதி
உதவிகளால் கட்சியை சரியவிடாது காப்பாற்றினார்.

அல்லாஹ் அவரையும் அழைத்துக் கொண்டான்.
அவரது ஜனாஸாவில் கலந்து கொண்ட ஹகீம் மஷூரின் ஆதரவாளால் அடிபடாத குறையாக வந்து சேர்ந்ததாக மக்கள் பேசிக் கொண்டனர்.

அகதி முகாம்களில் தங்கி வாழ்ந்த மன்னார் மக்களை
ஹகீம் சேர் ஏறிட்டுப் பார்த்தாரா ? என மன்னார் மக்கள் இன்றும் எழுப்புகின்றனர் கட்சியின் தலைதலைவர் என்ற வகையில் அவர் வராததைக் கடுமையாகச் சாடும் மக்களின்ஆதங்கம் இப்படி இருந்து கொண்டிருந்த போது வவுனியாவில் ஒரு சிங்கள எம்.பி ஒருவரோடு தனது சாதாரண அரசியல் அனுபவத்தைப் பெற்றுக் கொண்ட சகோதரர் ரிஷாத் அவர்கள் சாளம்பைக்குள்  முஸ்லிம்கள் சிலரின் ஆலோசனையோடு அரசியல் முதிர்ச்சி இன்றி களம் இறங்கி தேர்தலில் வெற்றார்.

ஹகீம் அவர்களின் பொடுபோக்கும் மக்கள் புறக்கணிப்பும் ரிஷாத் அவர்களின் அரசியலில் பாரிய முன்னேற்றத்தைக் கொடுத்தது. அவன்

தான் வகித்த மீழ் குடியேற்ற அமைச்சுப் பதவியினால் வன்னி மக்களின் மனங்களில் பாரியளவு இடம்
பிடித்து சிறப்பான சேவைகள் செய்தார்.

ரிஷாதின் தவறு
ரிஷாத் தனது அரசியலில் தன்னலம் சார்ந்த போக்கு அல்லது தூரநோக்கற்ற  நகர்வினால் பல ஆதரவாளர்களை தொடராக இழந்தார் தனது நெருங்கிய நண்பர்களான ஹுனைஸ் பாரூக் மற்றும் வை. எல். எஸ்.ஹமீத் போன்ற தனது கட்சியின் முக்கிய அங்கத்தவர்களை இழந்தது என்பது அவரது அரசியல் நிலைப்பாட்டின் ஒருவகைத் தளம்பல் என்றே கூற வேண்டும்.

காலையில் நண்பர்கள் மாலையில் எதிரிகள் என்ற நிலையில் ஆப்பக்கதையாக இவரது நண்பர்கள் பலரும் ஆதரவாளர்கள் பலரும் இவரின் எதிரிகளாக மாறினார்கள்

அவ்வாறே, ஆதரவு ஆலைவீசிய முஸ்லிம் காங்கிரஸ் கோட்டைகளான சம்மாந்துறை சாய்ந்த மருதமுனையிலும் எதிரிகள் உருவாகி சாய்ந்தமருதுவில் உருவப்படம் கூட எரித்தார்கள்.

ஹகீமின் மற்றொரு தவறு
தேசியப்பட்டியல் விவகாரமும் கட்சி உட்பூசல் காரணமாகவும் ஹஸனலி, பஷீர் ஷேகு தாவூத் போன்ற ஓரங்க ஆதரவாளர்களை ஹகீம் சேர் இழந்து மற்றொரு வீழ்ச்சியை சந்திக்கின்றார்.

இதனால் கட்சியின் முக்கிய உயர் பீட உறுப்பினர்கள் கூட விலகிச் செல்லும் நிலையில் காங்கிரஸ் தள்ளாடுகின்றது

கிழக்கில் சரியும் முஸ்லிம் காங்கிரஸ்

கிழக்கில் சாய்ந்தமருது பிரதேச சபை விவகாரம் மற்றும் தேசியப் பட்டியல் சண்டை அபிவிருத்தி இல்லாமை போன்ற காரணிகள் காங்கிரஸின் மற்றொரு சரிவை உறுதி செய்து விட்டது.

ஷூரா கவுன்சில் உறுப்பினர்கள் விலகி அ.இ.ம.கா இணையும் நிலை கட்சியின் வீழ்ச்சி பற்றிக் கூறும் பாடங்களாகும் .

புத்தளத்துக்கு புத்தெளுச்சி ஆதவன் வந்தான் போன்ற ஆகர்ஷ்ன ஜனரஞ்சகமான வார்த்தைகளால் பேஸ் புக்கில் வாசிக்க அழகாக இருந்தாலும்

முஸ்லிம் காங்கிரஸ் முதலாவது புத்துயிர் பெற வேண்டும் என்பது பொதுவான பார்வையாகும்
தேர்தல் காலங்களில்

மக்கள் கூட்டங்கள் கூடினாலும் தேர்தல் வாக்குகள் எண்ணும் வரை எதையும் உறுதியாகக் கூற முடியாது. மஹிந்தவை விடவுமா கூட்டம் சேர முடியும்.?

ரிஷாத் பறிகொடுப்பாரா ? பறித்தெடுப்பாரா ?

முசலிப் பிரதேச சபையின் தற்போதய அபேட்சகர்கள் ஏற்கெனவே மக்களால் தகுதி இல்லாத திருடர்கள் என முத்திரை குத்தப்படவர்கள். இவர்களை முசலிப் பிரதேச சபையில்
ரிஷாத் கட்சி நிறுத்தி இருப்பதும் மயில் சின்னத்தில் இன்றி யானையில் களமிறங்குவதும்
அ.இ.ம.காங்கிரஸின் ஒருவகையான பலவீனமே இதனால்
முஸ்லிம் காங்கிரஸ் சில நல்லவர்களை முசலியில் நிறுத்துவதால், அல்லது சிலபோது தமிழ் கூட்டமைப்போடு சேர்ந்து தனது நகர்வுகளைச் செய்தால் முசலிப் பிரதேச பறிபோகும் என்பது உறுதி.

அல்லாஹ் முஸ்லிம் மக்களுக்கு நன்மையையே நாடுவானாக!

அஷ்ஷெய்க்  M.J.M Rizwan madani M.A.(Cey )

(அனுப்புனர்: அபூ நமா)

சுகாதார ஊழியர்கள்தான் முதலில் சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கவேண்டும் - விஷேட ஆணையாளர் பிர்னாஸ் இஸ்மாயில்

ஏ.ஜி.முஹம்மட் இர்பான் ஒரு மனிதனின் முள்ளந்தண்டு எவ்வாறு அவசியமோ அதேபோல் ஒரு பிரதேசத்தை அல்லது நகரத்தை சுத்தம் செய்யும் சுகாதார ஊழியர்கள் காணப்படுகின்றார்கள் என்று ஏறாவூர் நகர சபையின் செயலாளரும், விசேட ஆணையாளருமான பிர்னாஸ் இஸ்மாயில் தெரிவித்தார். அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் ஏறாவூர் கிளை அனுசரணையின் கீழ் நகரசபையில் கடமையாற்றுகின்ற 50 சுகாதார தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு 1700 ருபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (16) ஏறாவூர் நகர சபையின் கூட்ட மண்பத்தில் இடம்பெற்றபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், சுகாதார ஊழியர்கள்தான் முதலில் சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கவேண்டும் அவ்வாறு இருந்தால்தான் நகரத்தை சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்வார்கள். அப்படியில்லை என்றால் நகரம் சுத்தமாக ஒருபோதும் இருக்காது. சுகாதார ஊழியர்களின் சுகாதாரத்தை பேனுவதற்கு, அவர்களுக்கான பாதுகாப்பு அங்கிகள், கையுரைகள் கொள்வனவு செய்ய இருந்தபோது மாகாண உள்ளுராட்சி அமைச்சினால் ஜனவரி மாதமளவில் அவைகள் கிடைக்கவுள்ளன. அதுமாத்திரமல்ல அவர்களின் பாதுகாப்பு தொடர்பான பயிற்சித்திட்டத்தினையும் வழங்கி வைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளேன். நகர சபையினை இரண்டு கண் கொண்டு பார்கின்றேன். அதில் ஒரு கண்ணாக எமது சுகாதார ஊழியர்களையும், மற்றய கண்ணாக ஏனைய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அனைவரையும் நான் பார்க்கின்றேன். நான் முதலில் முக்கியத்துவம் கொடுப்பது சுகாதார உழியர்களுக்கே. அவர்களின் குறை நிறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்து கொடுக்கவேண்டும் என்ற பணிப்புரையினை எமது ஆலுவலக உத்தியோகத்தர்களுக்கு வழங்கியுள்ளேன். எமது நகரை சுத்தமாகவும், சுகாதாரமுள்ள இடங்களாகவும், டெங்கு போன்ற உயிரைப் பறிக்கும் ஆபத்திலிருந்து எமது மக்களைப் பாதுகாக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற ஒரு தியாகச் சிந்தனையுடனும் பாரிய அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு வருகின்ற சுகாதார ஊழியர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் உதவுகின்றவர்களாக நாம் இருக்கின்ற இதேவேளை எமது பிரதேச மக்களும் இருக்கவேண்டும்.

இன்று இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி

  1. இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று விசாகப்பட்டணத்தில் இடம்பெறவுள்ளது.
  2. போட்டி பிற்பகல் 1.30 அளவில் போட்டி ஆரம்பமாகும். 

  • ஏற்கனவே இடம்பெற்ற போட்டிகளில் ஒரு போட்டியில் இலங்கை அணியும் மற்றைய போட்டியில் இந்திய அணியும் வெற்றிபெற்றுள்ளன. 
  • இதனால் இன்றைய போட்டி ஒரு தீர்மானம் மிக்க போட்டியாக விளங்குகின்றது.
  • இலங்கை அணி இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்புடன் இன்று போட்டியில் களமிறங்குகிறது.இலங்கை அணி வெற்றிபெறுமாயின் 35 வருட கால இலங்கை இந்திய ஒருநாள் போட்டி வரலாற்றில் முதன் முதலாக இந்திய மண்ணில் வைத்து தொடரைக் கைப்பற்றும் வாய்ப்பாக இது அமையும். 




  1. இந்திய மண்ணில் இதுவரை 8 தொடர்களில் இரு அணிகளும் மோதியுள்ளன. இந்திய அணி ஏழு போட்டிகளில்  வெற்றி பெற்றுள்ளது. 1997 ஆம் ஆண்டு அர்ஜுன ரணதுங்கவின் தலைமையில் நடைபெற்ற ஒருநாள் தொடர் சமநிலையில் முடிவுற்றது
  2. இந்திய அணியைப் பொறுத்தவரையில் அண்மையில்; நடைபெற்ற 8 தொடர்களில் தொடர்ச்சியாக வெற்றிபெற்றுள்ளது. எனவே இன்று நடைபெறும் போட்டியிலும் வெற்றிபெற்று தொடர்ச்சியாக 9 தொடர்களிலும் வெற்றி பெற்ற சாதனையையும் அது படைக்கக் காத்திருககின்றது. எனவே இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் முக்கிய போட்டியென்பதால் இன்றைய போட்டி இலு அணிகளுக்கும் சவால் மிக்கதாகவே இருக்கும்.
coltkn 12 12 fr 09124426421 5732356 11122017 MSS CMY

  • இலங்கை அணியின் புதிய தலைவர் திஸர பெரேராவுக்கு மட்டுமல்ல இலங்கை அணி வீரர்களுக்கும் அதிக அழுத்தமாய்' அமைந்த இந்தத் தொடரில். எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் உண்டு.
  • 3 போட்டிகள் கொண்ட தொடரில் முதலாவது போட்டி இந்திய தர்மலாசாவில் நடைபெற்றறது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற திஸர பெரேரா முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தார். யாரும் எதிர்பாராத விதமாக இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 29 ஓட்டங்களுக்கு 7 விக்கெட். 50 ஓட்டங்களுக்கு இந்திய அணி சகல விக்கெட்டுகளையும் இழக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. என்றாலும் அனுபவ வீரரான தோனி நின்று நிதானமாக ஆடியதால் 100 ஓட்டங்களைக் கடந்தது. இறுதியில் அவ்வணி 112 ஓட்டங்களு்க்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. கடைசியாக ஆட்டமிழந்த தோனி 67 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இலங்கை அணியின் சகல பந்து வீச்சாளர்களும் சிறப்பாகப் பந்து வீசியிருந்னர;
  • இந்திய அணயின் இத்தோல்வி சர்வதேச தர வரிசையில் முதலிடம் பெறும் கனவைத் தகர்த்துள்ளது. தற்போது 2ம் இடத்திலுள்ள இந்திய அணி இலங்கையுடனான தொடரை 3 – 0 என்ற ரீதியில் வெற்றிபெற்றால் முதலிடத்தை பெறும் சந்தர்ப்பம் இருந்தது. இத் தோல்வியின் மூலம் அது நிறைவேறாமல் போயுள்ளது.

மலேஷிய பிரதமரை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக்க மாரப்பன தலைமையிலான குழுவினர் வரவேற்றனர்


  1. மலேஷிய பிரதமர் நஜீப் பின் துன் அப்துல் ரஸாக் ((Najib bin Tun Abdul Razak ) இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு இன்று கொழும்பை வந்தடைந்தார்.
  2. இவரை வெளிநாட்டலுவல்கள் அமைச்சா திலக்க மாரப்பன தலைமையிலான குழுவினர் விமான நிலையத்தில் வரவேற்றனர். 
  3. இவர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரையில் இலங்கையில் தங்கியிருப்பார். 
  4. ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் பிரதமரை வரவேற்பதற்கான விசேட வைபவம் ஒன்று திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது. 
  5. ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று இலங்கை வரும் இவருடன் திங்கட்கிழமை இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. 
  6. விஞ்ஞான தொழில்நுட்பம்இ புதிய உற்பத்திக்கான உடன்படிக்கை ஆகியன தொடர்பில் இரண்டு நாடுகளுக்கிடையில் மூன்று புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளன.  இந்த உடன்படிக்கையின் மூலம் பொருளாதார அபிவிருத்தி மற்றும் இராஜதந்திர பயிற்சிகளுக்கும் திட்டமிடப்பட்டுள்ளன. இரண்டு நாடுகளுக்கிடையிலான இரஜதந்திர உறவுகள் 60 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு விசேட முத்திரை ஒன்றும்; கடித உறையொன்றும் வெளியிப்பட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
  7. மலேசிய பிரதமர்இ பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளார். 
  8. இரு நாடுகளுக்கு இடையில் பொருளாதார புரிந்துணர்வு மற்றும் வர்த்தகம் முதலீடுகளுக்கான சந்தர்ப்பத்தை விரிவுபடுத்துவது குறித்தும் இரு தரப்பினருக்கிடையிலான பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்படவுள்ளது. 
  9. மலேஷிய பிரதமர் இலங்கை முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் வட்டமேசை பேச்சுவார்த்தையிலும் பங்குகொள்ளவுள்ளார். 

100 சீனத் தம்பதியினருக்கு இலங்கை சம்பிரதாயப்படி திருமணம்.

சீன நாட்டைச் சேர்ந்த 100 தம்பதிகள் இலங்கை சம்பிரதாயப்படி ஒரே தினத்தில் இலங்கையில் திருமணம் செய்யவுள்ளனர். இந்த வைபவம் கொழும்பு மாநகர சபை வளாகத்தில் இன்று பிற்பகல் நடைபெறும்.. 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இதில் பிரதம அதிதிகளாகக் கலந்துகொள்வார்கள். அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஜோன் அமரதுங்க ஆகியோரும் இதில் பங்கேற்பார்கள்.   
article 2197242 0854ECA4000005DC 993 634x352

வேலைவாய்ப்புக்கள்

உள்நாட்டு செய்திகள்

வெளிநாட்டு செய்திகள்

அறிவியல் உலகம்

ஆரோக்கிய வாழ்வு

சிறப்புக் கட்டுரைகள்

தகவல் அறிதல்

விழிப்புணர்வு குறும்படங்கள்

 
Copyright © 2011. todayceylon1st . All Rights Reserved.
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Template Designe by Sifnas Hamy