amilsolution_ad_alt amilsolution_ad_alt amilsolution_ad_alt
amilsolution_ad_alt amilsolution_ad_alt
amilsolution_ad_alt amilsolution_ad_alt amilsolution_ad_alt

மரத்திற்கு சரிவு நல்லதல்ல.

மர்ஹூம் அஷ்ரஃப்  அவர்கள் மரச் சின்னத்தில் தோற்றுவித்த கட்சிதான் முஸ்லிம் காங்கிரஸ்.

1987 - 1988 காலப் பகுதியில் இலங்கை முஸ்லிம்களின் தேசிய கட்சியாகப் அது பரிணமித்தது.

குர்ஆனும் ஹதீஸூம் இதன் யாப்பு என சட்டத்தரணி அஷ்ரஃப் எழுதியது  அக்காலத்தில் ஒரு புதிய நகர்வுக்கான அரசியல் சிந்தனை என்பதை மறுக்க முடியாது.

அஷ்ரஃப் அந்த வழியில் நடந்தாரா? அவரது கட்சி நடக்கின்றதா? தற்போதய தலைவர் நடக்கின்றாரா? என்பது பலபக்க கேள்விகளாகும்

முஸ்லிம் காங்கிரஸ் என்பது தமிழரசுக் கட்சி போன்று ஒரு இனத்தின் சமயக் கோட்பாட்டாளர்களின் கட்சி என்று பார்ப்பதை விடுத்து அது ஒரு இனவாதக் கட்சி என்ற பிரச்சாரம் பேரினவாதிகளிடம் வலுக்கும் முன்னரே அஷ்ரஃப் தனது கட்சியை நுஆ என்ற கட்சியாக மாற்றி இலங்கையில் வாழும் பல்லின மக்களையும் பிரதிநித்துவப்படுத்தும் சூட்சுமத்தை அஷ்ரஃப் சாணக்கியமாக செய்தாலும் மறுமைப் பயணம் அவரை அவசரமாக அழைத்துக் கொண்டது . திட்டமிட்டபடி ஹெலி
அவரை அழைத்துச் சென்றாலும் அல்லாஹ் தனது எழுத்தை மாவனல்லை, திப்பிட்டி அரநாயக்க மலைமீது நடத்திக் காட்டினான்.

அன்றே அரசியல் அநாதை நிலைக்கு மாறி முஸ்லிம் சமூகம் இன்றும் அவர் போன்ற ஒரு வீரப்புருசனைக்காண ஏங்கித் தவிக்கின்றது என்பதுதான் கசப்பான உண்மை.

அஷ்ரஃப் அவர்களின் மரணத்தின் பின்னால் அவரது மனைவி
பேரியல் அஷ்ரஃப் அவர்கள் நுஆவில் கேட்டு அஷ்ரஃப் அவர்களின் மரண அனுதாபத்தால் வெற்றி பெற்றார்.

ஹகீம் தலைவராகின்றார்

ஹகீம் மர்ஹூம் அஷ்ரஃப் அவர்களின் அரசியல் நகர்வுகளையும் அனுபவங்களையும் நன்கு அறிந்தவராகவும் துடிதுடிப்பான ஒருவராகவும் மும்மொழிகளிலும் சிறந்த பேச்சாளர்களில் ஒருவராகவும் கட்சியின் முக்கிய பேச்சாளராகவும் விளங்கிய சட்டத்தரணி ஹகீம் (சேர்)அவர்கள் கட்சிக்கு புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டு சில ஆண்டுகள் மர்ஹூம் அஷ்ரஃப் தொடக்கிய பயணத்தில் கரிசனையாக செயல்பட்டு வந்ததை மறுக்க முடியாது.

அஷ்ரஃப் அவர்களின் மரணத்தின் பின்னால் முஸ்லிம் சமூகத்தில் பாரிய ஒரு இடை வெளி ஏற்பட்டது. சில பிரச்சினைகளை ஹகீம் சேரால் சமாளிக்க முடியாமல் போனது. சிலதில் அவரது பொடுபோக்குகளும் காரணே

நோய் ஆரம்பம்:
கட்சிக்சிக்குள் வைரஸ் பரவியது.

ஹாபிஸ் நஸீர் துஆக் கட்சி தொடங்கி தனிமையில் துஆவோடு திரிந்தார். அதாவுல்லாஹ், மற்றும் உதுமா லெப்பை போன்றோர் மகிந்த சால்வையில் தொங்கிக் கொண்டனர். மகிந்தயின் செல்லமகன் அதாவுல்லாஹ் மக்கள் காங்கிரஸ் என்ற கட்சியோடு குதிரைப் பயணத்தை அக்கரைப்பற்றில்
தொடங்கி அரசியல் வாப்பா மகிந்தவின்
பலத்தால் ரவ்டியாக உலாவந்தார்.

அக்கரைப்பற்றில் அதாவுல்லாவை மகிந்த மடயனாக்கி பிரித்தாளும் சூட்சுமத்தை செவ்வனே நிறைவேற்றினார். தவம் அதாவுல்லாவோடு தவண்டு துவண்டு கிடந்தார். பின்னர் மு.காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார். (பெரிய கதை

மட்டக்களப்பு மாவட்டத்தில் .
ஹிஸ்புல்லாஹ், அமீர் அலி போன்றோர் மட்டக்களளப்பிலும்
ரிஷாத் ஆகியோர் மற்றும் ஹுனைஸ் போன்றோர் மன்னாரிலும் சால்வைதாத்தாவின் குட்டிப் பிள்ளைகளாக வலம் வர தமக்கென
அ.இ.ம.க என்று கட்சியைத் தொடக்கிப் பயணிக்க மகிந்த உதவி செய்தார் . முஸ்லிம் காங்கிரஸை மகிந்த ஒருமிதிரி சரிக்கட்டினார்
கட்சிப் பெயர்கள்

காங்கிரஸ் + காங்கிரஸ் + காங்கிரஸ் = அஷ்ரஃப் என மொத்தம் 03 கட்சிகள் அஷ்ரஃபின் காங்கிரஸ் பெயரில் காணப்பட்டது.

மன்னாரில் ஹகீம் விட்ட தவறு
1990 ல் உடுத்திய உடையோடு வந்த மன்னார் மக்களின் புதிய திருமண செலவுக்காக அஷ்ரஃப் தலா 10.000. கொடுப்பது வழக்கம். அவரின் மரணத்தின் பின்னால் அது விடுபட்டுப் போனது
மன்னாரில் முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சியில் செல்வந்தர்
மர்ஹூம் மஷூர் அவர்களின் பங்களிப்பு மகத்தானது அவர் தனது நிதி
உதவிகளால் கட்சியை சரியவிடாது காப்பாற்றினார்.

அல்லாஹ் அவரையும் அழைத்துக் கொண்டான்.
அவரது ஜனாஸாவில் கலந்து கொண்ட ஹகீம் மஷூரின் ஆதரவாளால் அடிபடாத குறையாக வந்து சேர்ந்ததாக மக்கள் பேசிக் கொண்டனர்.

அகதி முகாம்களில் தங்கி வாழ்ந்த மன்னார் மக்களை
ஹகீம் சேர் ஏறிட்டுப் பார்த்தாரா ? என மன்னார் மக்கள் இன்றும் எழுப்புகின்றனர் கட்சியின் தலைதலைவர் என்ற வகையில் அவர் வராததைக் கடுமையாகச் சாடும் மக்களின்ஆதங்கம் இப்படி இருந்து கொண்டிருந்த போது வவுனியாவில் ஒரு சிங்கள எம்.பி ஒருவரோடு தனது சாதாரண அரசியல் அனுபவத்தைப் பெற்றுக் கொண்ட சகோதரர் ரிஷாத் அவர்கள் சாளம்பைக்குள்  முஸ்லிம்கள் சிலரின் ஆலோசனையோடு அரசியல் முதிர்ச்சி இன்றி களம் இறங்கி தேர்தலில் வெற்றார்.

ஹகீம் அவர்களின் பொடுபோக்கும் மக்கள் புறக்கணிப்பும் ரிஷாத் அவர்களின் அரசியலில் பாரிய முன்னேற்றத்தைக் கொடுத்தது. அவன்

தான் வகித்த மீழ் குடியேற்ற அமைச்சுப் பதவியினால் வன்னி மக்களின் மனங்களில் பாரியளவு இடம்
பிடித்து சிறப்பான சேவைகள் செய்தார்.

ரிஷாதின் தவறு
ரிஷாத் தனது அரசியலில் தன்னலம் சார்ந்த போக்கு அல்லது தூரநோக்கற்ற  நகர்வினால் பல ஆதரவாளர்களை தொடராக இழந்தார் தனது நெருங்கிய நண்பர்களான ஹுனைஸ் பாரூக் மற்றும் வை. எல். எஸ்.ஹமீத் போன்ற தனது கட்சியின் முக்கிய அங்கத்தவர்களை இழந்தது என்பது அவரது அரசியல் நிலைப்பாட்டின் ஒருவகைத் தளம்பல் என்றே கூற வேண்டும்.

காலையில் நண்பர்கள் மாலையில் எதிரிகள் என்ற நிலையில் ஆப்பக்கதையாக இவரது நண்பர்கள் பலரும் ஆதரவாளர்கள் பலரும் இவரின் எதிரிகளாக மாறினார்கள்

அவ்வாறே, ஆதரவு ஆலைவீசிய முஸ்லிம் காங்கிரஸ் கோட்டைகளான சம்மாந்துறை சாய்ந்த மருதமுனையிலும் எதிரிகள் உருவாகி சாய்ந்தமருதுவில் உருவப்படம் கூட எரித்தார்கள்.

ஹகீமின் மற்றொரு தவறு
தேசியப்பட்டியல் விவகாரமும் கட்சி உட்பூசல் காரணமாகவும் ஹஸனலி, பஷீர் ஷேகு தாவூத் போன்ற ஓரங்க ஆதரவாளர்களை ஹகீம் சேர் இழந்து மற்றொரு வீழ்ச்சியை சந்திக்கின்றார்.

இதனால் கட்சியின் முக்கிய உயர் பீட உறுப்பினர்கள் கூட விலகிச் செல்லும் நிலையில் காங்கிரஸ் தள்ளாடுகின்றது

கிழக்கில் சரியும் முஸ்லிம் காங்கிரஸ்

கிழக்கில் சாய்ந்தமருது பிரதேச சபை விவகாரம் மற்றும் தேசியப் பட்டியல் சண்டை அபிவிருத்தி இல்லாமை போன்ற காரணிகள் காங்கிரஸின் மற்றொரு சரிவை உறுதி செய்து விட்டது.

ஷூரா கவுன்சில் உறுப்பினர்கள் விலகி அ.இ.ம.கா இணையும் நிலை கட்சியின் வீழ்ச்சி பற்றிக் கூறும் பாடங்களாகும் .

புத்தளத்துக்கு புத்தெளுச்சி ஆதவன் வந்தான் போன்ற ஆகர்ஷ்ன ஜனரஞ்சகமான வார்த்தைகளால் பேஸ் புக்கில் வாசிக்க அழகாக இருந்தாலும்

முஸ்லிம் காங்கிரஸ் முதலாவது புத்துயிர் பெற வேண்டும் என்பது பொதுவான பார்வையாகும்
தேர்தல் காலங்களில்

மக்கள் கூட்டங்கள் கூடினாலும் தேர்தல் வாக்குகள் எண்ணும் வரை எதையும் உறுதியாகக் கூற முடியாது. மஹிந்தவை விடவுமா கூட்டம் சேர முடியும்.?

ரிஷாத் பறிகொடுப்பாரா ? பறித்தெடுப்பாரா ?

முசலிப் பிரதேச சபையின் தற்போதய அபேட்சகர்கள் ஏற்கெனவே மக்களால் தகுதி இல்லாத திருடர்கள் என முத்திரை குத்தப்படவர்கள். இவர்களை முசலிப் பிரதேச சபையில்
ரிஷாத் கட்சி நிறுத்தி இருப்பதும் மயில் சின்னத்தில் இன்றி யானையில் களமிறங்குவதும்
அ.இ.ம.காங்கிரஸின் ஒருவகையான பலவீனமே இதனால்
முஸ்லிம் காங்கிரஸ் சில நல்லவர்களை முசலியில் நிறுத்துவதால், அல்லது சிலபோது தமிழ் கூட்டமைப்போடு சேர்ந்து தனது நகர்வுகளைச் செய்தால் முசலிப் பிரதேச பறிபோகும் என்பது உறுதி.

அல்லாஹ் முஸ்லிம் மக்களுக்கு நன்மையையே நாடுவானாக!

அஷ்ஷெய்க்  M.J.M Rizwan madani M.A.(Cey )

(அனுப்புனர்: அபூ நமா)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

முக்கிய தகவல்: தமிழ் ஸ்ரீ நியுஸ்இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு எமக்கு செய்திகளை அனுப்பி வைக்குமாறு மிகத் தாழ்வுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

- நிருவாகம் -
தமிழ் ஸ்ரீ நியுஸ்

 
Copyright © 2011. todayceylon1st . All Rights Reserved.
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Template Designe by Sifnas Hamy