amilsolution_ad_alt amilsolution_ad_alt amilsolution_ad_alt
amilsolution_ad_alt amilsolution_ad_alt
amilsolution_ad_alt amilsolution_ad_alt amilsolution_ad_alt

இன்று இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி

  1. இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று விசாகப்பட்டணத்தில் இடம்பெறவுள்ளது.
  2. போட்டி பிற்பகல் 1.30 அளவில் போட்டி ஆரம்பமாகும். 

  • ஏற்கனவே இடம்பெற்ற போட்டிகளில் ஒரு போட்டியில் இலங்கை அணியும் மற்றைய போட்டியில் இந்திய அணியும் வெற்றிபெற்றுள்ளன. 
  • இதனால் இன்றைய போட்டி ஒரு தீர்மானம் மிக்க போட்டியாக விளங்குகின்றது.
  • இலங்கை அணி இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்புடன் இன்று போட்டியில் களமிறங்குகிறது.இலங்கை அணி வெற்றிபெறுமாயின் 35 வருட கால இலங்கை இந்திய ஒருநாள் போட்டி வரலாற்றில் முதன் முதலாக இந்திய மண்ணில் வைத்து தொடரைக் கைப்பற்றும் வாய்ப்பாக இது அமையும். 




  1. இந்திய மண்ணில் இதுவரை 8 தொடர்களில் இரு அணிகளும் மோதியுள்ளன. இந்திய அணி ஏழு போட்டிகளில்  வெற்றி பெற்றுள்ளது. 1997 ஆம் ஆண்டு அர்ஜுன ரணதுங்கவின் தலைமையில் நடைபெற்ற ஒருநாள் தொடர் சமநிலையில் முடிவுற்றது
  2. இந்திய அணியைப் பொறுத்தவரையில் அண்மையில்; நடைபெற்ற 8 தொடர்களில் தொடர்ச்சியாக வெற்றிபெற்றுள்ளது. எனவே இன்று நடைபெறும் போட்டியிலும் வெற்றிபெற்று தொடர்ச்சியாக 9 தொடர்களிலும் வெற்றி பெற்ற சாதனையையும் அது படைக்கக் காத்திருககின்றது. எனவே இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் முக்கிய போட்டியென்பதால் இன்றைய போட்டி இலு அணிகளுக்கும் சவால் மிக்கதாகவே இருக்கும்.
coltkn 12 12 fr 09124426421 5732356 11122017 MSS CMY

  • இலங்கை அணியின் புதிய தலைவர் திஸர பெரேராவுக்கு மட்டுமல்ல இலங்கை அணி வீரர்களுக்கும் அதிக அழுத்தமாய்' அமைந்த இந்தத் தொடரில். எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் உண்டு.
  • 3 போட்டிகள் கொண்ட தொடரில் முதலாவது போட்டி இந்திய தர்மலாசாவில் நடைபெற்றறது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற திஸர பெரேரா முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தார். யாரும் எதிர்பாராத விதமாக இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 29 ஓட்டங்களுக்கு 7 விக்கெட். 50 ஓட்டங்களுக்கு இந்திய அணி சகல விக்கெட்டுகளையும் இழக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. என்றாலும் அனுபவ வீரரான தோனி நின்று நிதானமாக ஆடியதால் 100 ஓட்டங்களைக் கடந்தது. இறுதியில் அவ்வணி 112 ஓட்டங்களு்க்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. கடைசியாக ஆட்டமிழந்த தோனி 67 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இலங்கை அணியின் சகல பந்து வீச்சாளர்களும் சிறப்பாகப் பந்து வீசியிருந்னர;
  • இந்திய அணயின் இத்தோல்வி சர்வதேச தர வரிசையில் முதலிடம் பெறும் கனவைத் தகர்த்துள்ளது. தற்போது 2ம் இடத்திலுள்ள இந்திய அணி இலங்கையுடனான தொடரை 3 – 0 என்ற ரீதியில் வெற்றிபெற்றால் முதலிடத்தை பெறும் சந்தர்ப்பம் இருந்தது. இத் தோல்வியின் மூலம் அது நிறைவேறாமல் போயுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்

முக்கிய தகவல்: தமிழ் ஸ்ரீ நியுஸ்இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு எமக்கு செய்திகளை அனுப்பி வைக்குமாறு மிகத் தாழ்வுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

- நிருவாகம் -
தமிழ் ஸ்ரீ நியுஸ்

 
Copyright © 2011. todayceylon1st . All Rights Reserved.
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Template Designe by Sifnas Hamy